Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/தொழிலாளர் விரோதப் போக்கு: தோட்ட நிர்வாகம் மீது குற்றச்சாட்டு

தொழிலாளர் விரோதப் போக்கு: தோட்ட நிர்வாகம் மீது குற்றச்சாட்டு

தொழிலாளர் விரோதப் போக்கு: தோட்ட நிர்வாகம் மீது குற்றச்சாட்டு

தொழிலாளர் விரோதப் போக்கு: தோட்ட நிர்வாகம் மீது குற்றச்சாட்டு

ADDED : மே 28, 2010 03:54 AM


Google News

ஊட்டி : குன்னூர் அருகே கொலக்கம்பை பகுதியில் செயல்படும் தனியார் தேயிலைத் தோட்ட நிர்வாகத்தினர், தொழிலாளர் விரோதப் போக்கை கடைபிடிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.



மா.கம்யூ., மாவட்ட செயலர் பத்ரி வெளியிட்டுள்ள அறிக்கை:  நீலகிரி மாவட்டத்தில் கொலக்கம்பை பகுதியில் செயல்படும் தனியார் தேயிலைத் தோட்டத்தில், சமீப காலங்களாக தொழிலாளர் விரோதப் போக்கு, மக்களுக்கு எதிரான நடவடிக்கை அதிகரித்து வருகிறது.

வெளி மாநிலங்களிலிருந்து ஏராளமான தொழிலாளர்களை வரவழைத்து பணியில் அமர்த்தியுள்ளதோடு, இங்கு பணிபுரியும் ஒரு சாராரை வஞ்சிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது. சமீப காலங்களில் மட்டும், சட்டத்துக்கு புறம்பான முறையில் ஊழியர்கள் பலர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.



தமிழக அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஊதியமும் முறையாக வழங்குவதில்லை. பிரச்னை குறித்து புகார் செய்தும், தொழிலாளர் நலத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை.தூதூர்மட்டம் அரசு நடுநிலைப் பள்ளிக்கு மேலூர் ஊராட்சி மூலமாக வரும் நீர் இணைப்பை, தேயிலைத் தோட்ட நிர்வாகம், சட்ட விரோதமாக தன்னிச்சையாக துண்டித்துள்ளதோடு, குழாய்களை நிலத்திலிருந்து பிடுங்கி அப்புறப்படுத்தியுள்ளது; பள்ளிக் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்; இதுபோன்ற பல பிரச்னைகளால், தொழிலாளர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.  தேயிலைத் தோட்ட நிர்வாகத்தின் செயலுக்கு உடனடியாக தீர்வு ஏற்படுத்துவதோடு, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.   இவ்வாறு, மாவட்ட செயலர் பத்ரி கூறியுள்ளார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us